மாசி: 11 🌼 வெள்ளிக்கிழமை | 📆 23- 02- 2024 🦚| ராசி- பலன்கள்

 மாசி: 11. 🇮🇳꧂
     🌼 வெள்ளிக்கிழமை 🦜
           📆 23- 02- 2024 🦚  
       🔎  ராசி- பலன்கள்  🔍

╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝

🔯 மேஷம் -ராசி: 🐐🐐
நினைத்த பணிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். தாயாரின் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு மேம்படும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். பழைய சிந்தனைகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது. நலம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்.

⭐அஸ்வினி : தடைகள் விலகும்.
⭐பரணி : மகிழ்ச்சியான நாள்.
⭐கிருத்திகை : கவனம் வேண்டும்.
◄•━━━━━━━━━━━━━━•►

✡ ரிஷபம் ராசி: 🐂 🐂
சவாலான விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் சிலருக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். அரசு சார்ந்த விஷயங்களில் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் நிதானத்தை கையாளவும். உத்தியோகத்தில் சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். எதையும் சமாளிக்கும் தைரியம் பிறக்கும். ஓய்வு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு  
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு.

⭐கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
⭐ரோகிணி : அலைச்சல் ஏற்படும்.
⭐மிருகசீரிஷம் : தைரியம் பிறக்கும்.
◄•━━━━━━━━━━━━━━•►

🔯 மிதுனம் -ராசி: 👫👫
குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். எதிர்பார்த்த சில தனவரவுகள் கிடைக்கும். இழுபறியான வேலைகளை செய்து முடிப்பீர்கள். வெளியூரிலிருந்து சாதகமான செய்தி கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். நன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை.

⭐மிருகசீரிஷம் : குழப்பங்கள் குறையும்.
⭐திருவாதிரை : சாதகமான நாள்.
⭐புனர்பூசம் : போட்டிகள் குறையும்.
◄•━━━━━━━━━━━━━━•►

🔯 கடகம் -ராசி: 🦀 🦀
திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படும். தொலைதூர உறவினர்களின் சந்திப்பு உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் அதிகாரிகளால் சிறு சிறு அலைச்சல் உண்டாகும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். புதிய முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். வரவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்.

⭐புனர்பூசம் : தாமதம் ஏற்படும்.
⭐பூசம் : அலைச்சலான நாள்.
⭐ஆயில்யம் : புரிதல் உண்டாகும்.
◄•━━━━━━━━━━━━━━•►

🔯 சிம்மம் -ராசி:  🦁🦁
மறைமுகமான சில விமர்சனங்கள் தோன்றி மறையும். நெருக்கமானவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். கடின உழைப்பிற்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத சில புதிய பயணங்கள் உண்டாகும். சக ஊழியர்களால் சிறு சிறு வருத்தங்கள் நேரிடும். பிறமொழி பேசும் மக்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீலம்.

⭐மகம் : விமர்சனங்கள் மறையும்.
⭐பூரம் : பயணங்கள் உண்டாகும்.
⭐உத்திரம் : புரிதல் அதிகரிக்கும்.
◄•━━━━━━━━━━━━━━•►

🔯 கன்னி -ராசி: 🧛‍♀ 🧛‍♀
மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். வாகன வசதிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பொறுப்பு மேம்படும். பணி நிமிர்த்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வரவுகளால் சேமிப்பு மேம்படும். ஆக்கப்பூர்வமான நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் :  6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐உத்திரம் : புத்துணர்ச்சி பிறக்கும்.
⭐அஸ்தம் : வசதிகள் அதிகரிக்கும்.
⭐சித்திரை : சேமிப்பு மேம்படும்.
◄•━━━━━━━━━━━━━━•►

🔯 துலாம் -ராசி: ⚖ ⚖
வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை குறையும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். கனிவான பேச்சுகளின் மூலம் ஆதரவு மேம்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சில நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். செலவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.

⭐சித்திரை : நம்பிக்கை அதிகரிக்கும்.
⭐சுவாதி : ஆதரவு மேம்படும்.
⭐விசாகம் : புதுமையான நாள்.
◄•━━━━━━━━━━━━━━•►

🔯 விருச்சிகம்- ராசி: 🦂🦂
கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். இழுபறியான சில தனவரவுகள் கிடைக்கும். குழந்தைகளின் வழியில் சுப செயல்களை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் சிறு சிறு தாமதம் ஏற்பட்டு நீங்கும். உயர் அதிகாரிகளிடத்தில் முக்கியத்துவம் ஏற்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். மருத்துவத் துறையில் சாதகமான வாய்ப்பு ஏற்படும். தனம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்.

⭐விசாகம் : புரிதல் அதிகரிக்கும்.
⭐அனுஷம் : தாமதம் நீங்கும்.
⭐கேட்டை : வாய்ப்பு ஏற்படும்.
◄•━━━━━━━━━━━━━━•►

🔯 தனுசு -ராசி: 🏹 🏹
திட்டமிட்ட பணிகளில் காலதாமதம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் சிந்தித்துச் செயல்படவும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சமூகம் தொடர்பான சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். அலுவலகத்தில் மற்றவர்கள் பணிகளையும் பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும். எதிலும் நிதானதோடு செயல்படுவது நல்லது. விவேகம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு.

⭐மூலம் : சிந்தித்துச் செயல்படவும்.
⭐பூராடம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
⭐உத்திராடம் : நிதானம் வேண்டும்.
◄•━━━━━━━━━━━━━━•►

🔯 மகரம் -ராசி: 🐴🐴
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். மனதளவில் தெளிவு ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.

⭐உத்திராடம் : வாய்ப்பு கிடைக்கும்.
⭐திருவோணம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.
⭐அவிட்டம் : தெளிவு ஏற்படும்.
◄•━━━━━━━━━━━━━━•►

🔯 கும்பம் -ராசி. ⚱⚱
சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். அரசு பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வழக்குகளில் சில திருப்பங்கள் ஏற்படும். வியாபாரத்தில் மேன்மையான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். கடன் சார்ந்த சில உதவிகள் சாதகமாகும். லாபம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு.

⭐அவிட்டம் : தாமதங்கள் விலகும்.
⭐சதயம் : மேன்மையான நாள்.
⭐பூரட்டாதி : மாற்றம் உண்டாகும்.
◄•━━━━━━━━━━━━━━•►

🔯 மீனம் -ராசி: 🐠 🐠
புதிய முயற்சிகள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். குழந்தைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வேலையாட்களிடத்தில் பொறுமையுடன் செயல்படவும்.  புதுமையான விஷயங்களில் ஆர்வம் பிறக்கும். சக ஊழியர்களிடத்தில் அமைதி வேண்டும். கல்வியில் இருந்துவந்த மந்தநிலை விலகும். பக்தி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐பூரட்டாதி : எண்ணியவை ஈடேறும்.
⭐உத்திரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும்.
⭐ரேவதி : மந்தநிலை விலகும்.

Comments

Popular posts from this blog

ஆவணி: 𝟭𝟰 🇮🇳꧂ 🌼 வெள்ளிக்கிழமை 🦜 📆 𝟯𝟬• 𝟬𝟴• 𝟮𝟬𝟮𝟰 🦚 🔎 ராசி- பலன்கள்

மார்கழி: 𝟭𝟴 வியாழன் -கிழமை 𝟬𝟮•𝟬𝟭•𝟮𝟬𝟮𝟱 🦚 🔎 ராசி- பலன்கள் 🔍

மிதுன லக்னக்காரர்களுக்கு கேது திசை நடந்தால் உண்டாகும் பலன்கள் !!